Saturday, December 6, 2025

இப்பவே வாங்கிருங்க., அடுத்த ஆண்டு வெள்ளி விலை இதுதான்..!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ச்சியை பதிவு செய்துக்கொண்டிருக்கும் நிலையில், வெள்ளியின் விலையும் அதேபோல் விறுவிறுவென அதிகரித்து வருகிறது. தினமும் புதிய உச்சம் தொட்டு வரும் தங்க விலை காரணமாக, எப்படி சமாளிப்பது என்று குழப்பத்தில் மக்கள் இருக்கின்றனர்.

செப்டம்பர் மதத்திற்கு பிறகு வெள்ளயின் விலை கணிசமாக அதிகரித்தது. இதற்கு பல காரணங்கள் உள்ளன என்று நகை வியாபாரிகள் கூறுகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் வெள்ளி விலை சுமார் 110 சதவீதம் உயர்ந்துள்ளது. முன்பு பூஜை பொருட்கள், பாத்திரங்கள், அணிகலன்கள் போன்றவற்றிற்கே வெள்ளி பொருந்தியது. தற்போது தொழில்துறையிலும் வெள்ளியின் பயன்பாடு கூடுவதால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் பலர் வெள்ளியில் முதலீடு செய்வதால் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. வரும் நாட்களில் கிராம் வெள்ளி 300 ரூபாயைத் தாண்டி, கிலோவுக்கு 3 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று வியாபாரிகள் கூறுவதால் நடுத்தர வர்க்க மக்களுக்கு கவலை இருந்துவருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News