மலச்சிக்கலைப் போக்குவதற்காக ஆசன வாய்க்குள் 20 செ.மீ விலாங்கு
மீனை நுழைத்த வாலிபரின் செயல் சீனாவில் பரபரப்பாகியுள்ளது.
கிழக்கு சீனாவின் சியாங்சு மாகாணம், ஜியாங்குவா பகுதியைச் சேர்ந்த
வாலிபர் ஒருவர் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்துள்ளார். மலச்சிக்கலைப்
போக்க மருத்துவரை நாட வெட்கப்பட்ட இவர் தானாகவே மருத்துவம் பார்க்க
முடிவு செய்தார்.
அதைத் தொடர்ந்து 20 செ.மீ நீளமுள்ள விலாங்கு மீனைத் தனது
ஆசன வாய்க்குள் நுழைத்துள்ளார். அது எதிர்பாராத விதமாக
அடிவயிற்றுப் பகுதிக்குள் நுழைந்துவிட்டது.
இதனால், கடுமையான வலி ஏற்படத் தொடங்கியுள்ளது. இனியும் வலியைப்
பொறுக்க முடியாது என்ற நிலையில், அருகிலுள்ள மருத்துவமனைக்குச்
சென்றிருக்கிறார்.
மருத்துவர்களும் துரிதமாக செயல்பட்டு அந்த மீனை அகற்றி
வாலிபரைக் காப்பாற்றியுள்ளனர். அந்த விலாங்கு மீனும் அப்போது
உயிருடன் இருந்துள்ளது.
தற்போது அந்த வாலிபரும் பிழைத்துவிட்டார். சிறிதுநேரம் தாமதமாக
வந்திருந்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று அந்த
வாலிபரை டாக்டர்கள் எச்சரித்தனர்.
வாலிபரின் செயலைப் பலரும் கண்டித்துவரும் நிலையில்,
டாக்டர்களின் சமயோசித செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சுய வைத்தியம் செய்ய முனைவது எவ்வளவு ஆபத்தானது என்பதைப்
பொதுமக்கள் மனதில்கொள்ள வேண்டும்.