LPG கேஸ் விநியோகம் எப்போது சீராகும்? அரசு அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! இதோ…

இந்தியாவில் பயன்படுத்தப்படும் எல்பிஜி கேஸின் சுமார் 60% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்கள், உணவகங்கள் மற்றும் தொழிற்துறைகளில் பயன்படும் வணிக சிலிண்டர்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் பெரும்பாலும் வெளிநாட்டு சார்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா பெருமளவில் எல்பிஜி வாங்குகிறது.

பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலின் பின்னர், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் இந்த விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு உருவானது. முதற்கட்டமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டது. வீட்டு பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது நகரங்களில் 25 நாட்களுக்கு ஒருமுறை மற்றும் கிராமங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சிலிண்டர் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தாலும், சிலிண்டர் கிடைப்பதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வணிக சிலிண்டர்களின் விலை உயர்வு மற்றும் கிடைப்பில் உள்ள சிக்கல் காரணமாக தேநீர், காபி மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இந்த நிலைமை சீராக 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதோடு, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து எல்பிஜி இறக்குமதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வாய்ப்புள்ளவர்கள் பிஎன்ஜி இணைப்புக்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News