Thursday, February 19, 2026

அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக

தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.

இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி இன்று காலை சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இணைந்த பாமகவிற்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related News

Latest News