மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்கு… வி.எஸ்.பாபு உடல் தகனம்!

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் திடீரென இதயம் செயலிழந்ததால் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை அருகே உள்ள திருநாவுக்கரசு தெருவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

முதலமைச்சர் விஜய் நேற்று மாலை நேரில் சென்று வி.எஸ்.பாபுவின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன், சரத்குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தினர். இன்று அமைச்சர் ராஜ்மோகனும் அஞ்சலி செலுத்தினார்.

வி.எஸ்.பாபுவை எப்படியாவது காப்பாற்ற முதலமைச்சர் விஜய் முயற்சி செய்தார். ஆனால் இயற்கையின் முடிவை மாற்ற முடியவில்லை என்று வைகோ வேதனை தெரிவித்தார்.

இன்று மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். அதன்பிறகு இறுதிச் சடங்குகள் நடைபெற்று, அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திரு.வி.க. நகர் மாநகராட்சி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட உள்ளது.a

Related News

Latest News