உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை, ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ், உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பல முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.