Tuesday, December 16, 2025

டெல்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு : விமான சேவை பாதிப்பு

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்பட முடியவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

நேற்று மாலை டெல்லி விமான நிலையத்தில் சர்வர் செயலிழப்பு காரணமாக 20 விமானங்கள் தாமதமாக வந்தன. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Related News

Latest News