Wednesday, March 26, 2025

“தமிழ்நாட்டில் வரம்புக்குள்தான் கடன் உள்ளது” – நிதித்துறை செயலாளர் விளக்கம்

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான நிதி ஆதாரம் மற்றும் கடன் தொடர்பாக நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

மாநில அரசின் கடன் வாங்கும் அளவு வரம்புக்குள்தான் உள்ளது என்று தெரிவித்த அவர், மத்திய அரசிடம் இருந்து பல திட்டங்களுக்கான நிதி வந்திருந்தால் இது குறைந்திருக்கும் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 41,000 கோடி ரூபாயாக குறையும் என்று உதயசந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளளார். ஜிஎஸ்டியை பொறுத்தவரை டிஜிட்டல் சேவையில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news