Tag: NithishKumar
நிறம் மாறும் நிதிஷ் குமாருக்கு இப்படியொரு ‘அலர்ஜி’!
10 ஆண்டுகள்ல அஞ்சு முறை கூட்டணி மாற்றம், 9 முறை CM பதவின்னு பிசியான அரசியல்வாதியா இருக்குற நிதிஷ் குமார், 35 ஆண்டுகளா MLA மட்டும் ஆகல. அதெப்படிப்பா MLA ஆகாம CM ஆக முடியும்னு தானே கேக்குறீங்க? அதைப் பத்திதான் இந்த செய்தி தொகுப்புல தெரிஞ்சுக்க போறோம். 2020ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை பாஜக கூட சேர்ந்து நிதிஷ் குமாரோட JDU எதிர்கொண்டுச்சு.
122 தொகுதிகள்ல வெற்றி பெற்றா ஆட்சியை புடிக்கலாம் அப்படின்ற நிலையில, பாஜக 74 தொகுதிகள்லயும் JDU 43 தொகுதிகள்லையும் வெற்றி பெற்று, நிதிஷ் குமார் CM ஆனாரு. அதை தொடர்ந்து, 2022ஆம் ஆண்டுல பாஜகவை விட்டு வெளியேறின நிதிஷ் RJD மற்றும் காங்கிரஸ் கூட கூட்டணி வச்சு மறுபடியும் CM பதவியை புடிச்சாரு. இப்ப இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, பாஜக ஆதரவு MLAக்களோட மீண்டும் ஒரு முறை CM ஆகி இருக்காரு.
இப்படி கிடைக்குற chanceல லாம் புகுந்து விளையாடுற நிதிஷ் குமாருக்கு MLA பதவின்னா மட்டும் கொஞ்சம் அலர்ஜிங்க. காரணம், அது மக்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வேண்டிய பதவி. இப்படி மூச்சுக்கு முன்னூறு முறை கூட்டணியை மாத்துனா மக்களை நம்பி தொகுதிகளை எப்படி வெற்றி பெற முடியும்? 2005ஆம் ஆண்டுல இருந்து தற்போது வரைக்கும் பீகார் முதல்வரா நிதிஷ் குமார் இருந்துட்டு வராரு. அதுக்கு முக்கியமான காரணம், அங்க இருக்க சட்ட மேலவை தான்.
தமிழ்நாட்டுல முன்னொரு காலத்துல சட்ட மேலவை இருந்தாலும், இப்ப நடைமுறைல இல்ல. ஆனா கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள்ல சட்டசபை மட்டுமில்லாம சட்ட மேலவையும் செயல்பட்டு வருது. சட்ட மேலவை உறுப்பினர் பதவி வகிக்க MLAக்களோட ஆதரவு இருந்தா போதும். அந்தவகையில் தான் நிதிஷ் குமார் சட்ட மேலவை உறுப்பினரா இருந்து முதலமைச்சர் பதவியை தக்க வச்சுட்டு வராரு. 1977ஆம் ஆண்டு ஹரனாட் சட்டசபை தொகுதியில நின்னு தோல்வியடைஞ்ச பிறகு, 1985ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்ல போட்டியிட்டு முதல் முறையா மட்டுமில்ல கடைசி முறையாவும் MLA ஆனாரு நிதிஷ் குமார்.
அதுக்கப்புறம் 35 ஆண்டுகளா MLAவா போட்டியிடாமலே முதல்வர் பதவியை கைவசம் வச்சுருக்கறது, நிதிஷ் குமாரோட ராஜதந்திரமா பாக்கப்பட்டாலுமே தோல்விக்கு பயந்து, MLAகளை மட்டுமே அரசியல் சதுரங்கத்துல காய்நகர்த்தி பதவியை தக்க வைக்குறது ஒரு வகையான கோழைத்தனம் அப்படின்றதே அரசியல் விமர்சகர்களோட பரவலான கருத்தா இருக்கு.
நிதிஷ்குமாரின் பாதுகாப்பு பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி வகித்துவருகிறார். சமீபத்தில், பா.ஜ.க.வுடனான...