Wednesday, October 30, 2024
Home Tags Ambani son

Tag: ambani son

1,000 கோடிகளை தாண்டிய திருமணக் கொண்டாட்டம்! அம்பானி மருமகள் யார் தெரியுமா?

0
இந்தியாவில மட்டும் இல்ல, உலகத்துலயே முன்னணி பணக்காரர்கள்ல ஒருத்தரான முகேஷ் அம்பானியோட இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானியோட Pre Wedding கொண்டாட்டங்கள் தான் இப்போதைக்கு internetல hot topicஆ போய்ட்டு இருக்கு. ஏறக்குறைய 1,000 கோடிகளை தாண்டி இருக்க இந்த கல்யாண விழாவுக்கு பாலிவுட் நடிகர்கள் தொடங்கி பிரபல பாப் பாடகி ரிஹானா, bill gates, முன்னாள் அமெரிக்க அதிபரோட மகள் இவன்கா ட்ரம்ப், Facebok உரிமையாளர் Mark Zuckerberg மாதிரியான சர்வதேச பிரபலங்கள் வரைக்கும் படையெடுத்து வந்த நிகழ்வுகள் தான் social mediaலயும் செம வைரல். அதெல்லாம் இருக்கட்டும், ஆனந்த் அம்பானி தெரியும், அவரை கல்யாணம் பண்ணிக்க போற ராதிகா merchant யாரு? இதை பத்தி தான் இந்த வீடியோவில தெரிஞ்சுக்க போறோம். முகேஷ் அம்பானியோட மூணு பிள்ளைகள்ல ஆனந்த் அம்பானி தான் இளையவர். அவரை திருமணம் செய்றதுனால, ராதிகா மெர்ச்சண்ட் இந்தியாவோட பணக்கார குடும்பத்தோட மருமகள் அப்படின்ற அந்தஸ்தை அடையுறாங்க. இந்திய மருந்தக நிறுவனமான Encore Healthcare நிறுவனத்தோட தலைமை நிர்வாக அதிகாரியான விரேன் மெர்ச்சண்ட்டோட மகள் தான் ராதிகா மெர்ச்சண்ட். மும்பை கதீட்ரல், ஜான் கோனன், எக்கோலா மாடர்ன் வேர்ல்ட் உள்ளிட்ட பள்ளிகள்ல படிச்ச ராதிகா, நியூயார்க் பல்கலைக்கழகத்துல அரசியல் அறிவியல்ல பட்டம் பெற்று இருக்காங்க. இது போக, இஸ்ப்ரவா நிறுவனத்துல விற்பனை அதிகாரியாகவும் வேலை செஞ்சு இருக்காங்க. இப்போ தன்னோட அப்பாவோட என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தோட இயக்குனர் குழுவுலயும் ஒரு partஆ இருக்காங்க. பரத நாட்டிய கலையிலயும் ரொம்ப ஆண்டுகளாவே பயிற்சி எடுத்துட்டு வர்றாங்க ராதிகா. குறிப்பாக, டிசம்பர் 2022ஆம் ஆண்டு தன்னோட நடன அரங்கேற்றம் அப்ப தான் ஊடகங்கள்லையும் சமூகவலைதளங்கள்லையும் அதிக கவனம் ஈர்க்கத் தொடங்குனாங்க. டிசம்பர் 2022ஆம் ஆண்டுலயே ராதிகா மற்றும் ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்தம் செஞ்சுக்கிட்டாங்க. ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடக்க போற நிலையில, இப்ப நடந்து இருக்க பிரம்மாண்டமான திருமணத்துக்கு முந்தய கொண்டாட்டங்கள் பேசுபொருளா மாறி இருக்கு. இது இருக்கட்டும் இதே மாதிரி தமிழ்நாட்டுல நடந்த ரொம்பவே ஆடம்பரமான கல்யாணம் பத்தி உங்களுக்கு தெரியுமா? 1995ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவங்களோட வளர்ப்பு மகன் சுதாகருக்கு கோடி கணக்குல செலவு செய்து நடந்த திருமணம் தான் அது. இந்த திருமணம்தான் ஜெயலலிதாவுக்கு பிற்காலத்துல மிகப் பெரிய ஆப்பாவும் அமைஞ்சதுன்னு சொல்லலாம். சுதாகரன் திருமண நிச்சயதார்தத்துக்கு மட்டுமே 8 லட்சம் மதிப்பிலான நகைகளை குறித்த வழக்கு உள்ளிட்ட சொத்துகுவிப்பு வழக்குகள் ஜெயலலிதாவோட அரசியல் பாதையில இன்னைக்கு வரைக்கும் அழிக்க முடியாத கருப்பு புள்ளியாவே தான் இருக்கு. காதல், புரிதல் மையமா இருக்க வேண்டிய இடத்துல இது போன்ற திருமணங்கள் வணிக ஒப்பந்தங்களுக்கு நிகராக மாறிப் போகுது என்பதே பரவலான கருத்தா இருக்கு. உங்களோட பார்வையில பிரம்மாண்டமான திருமணங்கள் சிறந்ததா எளிமையான திருமணங்கள் சிறந்ததா என்பதை கமெண்ட்ல சொல்லுங்க. -ஷைனி மிராகுலா

அம்பானி வீட்டில் குவா குவா சத்தம்!!மகிழ்ச்சியில் அம்பானியின் மகன்…

0
இந்நிலையில் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி ஷ்லோகா மேத்தா என்பவரை திருமணம்

Recent News