மழைக்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி-க்கள் 50 மணிநேர தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

325

மழைக்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி-க்கள் 50 மணிநேர தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எம்.பி-க்கள் இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர்.

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பு எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவையில் அமளியில் ஈடுபட்டதாக மக்களவையில் 4 எம்.பி-க்களும், மாநிலங்களவையில் 20 எம்.பி-க்களும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி, சஸ்பெண்ட் செய்ப்பட்ட எம்.பி-க்கள் 50 மணிநேர தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இரவு முழுவதும் எம்.பி-க்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.