Friday, January 24, 2025

ஆஸ்கர் தகுதிப்பட்டியலில் கங்குவா..ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி வெளியிடப்பட்டது. இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் வெளியானது.

பெரும் எதிரிபார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. அதிகமான சத்தம், திரைக்கதையில் தொய்வு போன்ற காரணங்களால் இப்படம் தோல்வி படமாக அமைந்தது.

இந்நிலையில் ‘கங்குவா’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

97வது ஆஸ்கர் விருதுகளுக்காக உலகம் முழுவதும் இருந்து 323 படங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 207 படங்கள் ஃபில்டர் செய்யப்பட்டு சிறந்த படம் என்ற பிரிவில் தகுதிப்பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. இந்த 207 படங்களின் பட்டியலில் கங்குவா திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

Latest news