வைரலாகும் திரிஷாவின் ‘கேப்ஷன்’ – என்ன ‘சொல்லி’ இருக்காங்க?

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் மே 10ம் தேதி பதவியேற்றார். நேரு ஸ்டேடியத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் சினிமா பிரபலங்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், தவெக தொண்டர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அவரது பெற்றோர் சந்திரசேகர் – ஷோபா இருவரும் விழாவில் பங்கேற்றனர். விஜய்யின் மனைவி, குழந்தைகள் கலந்து கொள்ளவில்லை. நீலநிற புடைவையில் மல்லிகைப்பூ வைத்து நடிகை திரிஷா விழாவில் கலந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தநிலையில் திரிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ” The Love is Always Louder’ அதாவது ‘அன்பு எப்போதும் உரக்க ஒலிக்கும்”, என்று தெரிவித்து இருக்கிறார். பின்னணியில் காதலர் தினம் படத்தில் இடம்பெற்ற காதலெனும் தேர்வெழுதி பாடலில் வரும், ” இது கன்னங்களா இல்லை தென்னங்களா இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா, இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா”, என்னும் வரிகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Related News

Latest News