‘சவுதி +பாகிஸ்தான்+ துருக்கி..’!! உருவானது இஸ்லாமிய ‘நேட்டோ’!! அமெரிக்கா, இஸ்ரேலை அலறவிட்ட ‘சம்பவம்’!

உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று முக்கிய நாடுகள் இணைந்து “மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்” (Mecca Joint Defence Agreement) கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், “இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்” என்பதாகும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், தங்களின் பாதுகாப்பை ஒரு கூட்டுப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவர இந்த நாடுகள் கைகோர்த்துள்ளன.

சவுதி அரேபியாவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்துகொண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்புடன் அந்நாட்டு ராணுவத் தளபதி ஆசிம் முனீரும் இந்தச் சந்திப்பில் உடனிருந்தது, இந்த ஒப்பந்தத்தின் ராணுவ முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகிறது. எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியா, அணு ஆயுத பலம் கொண்ட பாகிஸ்தான் மற்றும் நேட்டோ அமைப்பில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ள துருக்கி ஆகிய மூன்றும் இணைந்திருப்பது சர்வதேச அளவில் ஒரு புதிய அதிகார மையத்தை உருவாக்கியுள்ளது.

சமீபகாலமாக ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளான ஹவுதிகள் மற்றும் ஈராக் கிளர்ச்சியாளர்களால் சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகள் மற்றும் முக்கிய இடங்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களே சவுதி இத்தகைய ஒரு முடிவை எடுக்கக் காரணமாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா தனது சொந்த நலன்களுக்கும், இஸ்ரேலுக்கும் மட்டுமே முன்னுரிமை அளித்து வருவதால், இனி தற்காப்பிற்குத் தங்களுக்குள்ளேயே புதிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள இந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் மாறிவரும் அரசியல் சூழலில், யார் நண்பன் யார் எதிரி என்பதைத் தீர்மானிக்க இந்த நாடுகள் இப்போதே தயாராகிவிட்டன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மூன்று நாடுகளும் இணைந்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வது, நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது எனப் பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளன.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் சவுதியும் பாகிஸ்தானும் இத்தகைய ஒரு ஒப்பந்தத்தைச் செய்திருந்த நிலையில், இப்போது துருக்கியும் இதில் இணைந்திருப்பது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு ஒரு மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு சமன்பாடுகளை இந்த “மெக்கா ஒப்பந்தம்” முற்றிலும் மாற்றியமைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Related News

Latest News