2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது. நேற்று மதியம் 1:00 மணி நிலவரப்படி, இக்கட்சி சுமார் 104 தொகுதிகளில் முன்னிலை வகித்து திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் கிட்டத்தட்ட தவெக வெற்றி உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் விஜய்க்கு நடிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில்
நடிகர் விஜய் தேவரகொண்டா பதிவு…
நடிகர் நானி பதிவு…
நடிகர் விக்ரம் பதிவு..

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இயக்குநர் பா ரஞ்சித் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
தெலுங்கு நடிகரும் தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான பாலகிருஷ்ணா, தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெகவின் அமோக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் எம்.ஜி.ஆர் அவர்களும், தெலுங்கு நாட்டில் என் தந்தையும், தெலுங்கு தேசத்தின் மூத்த தலைவருமான என்.டி.ஆர் அவர்களும், ஒரு நடிகர் மனது வைத்தால் வரலாற்றை மீண்டும் எழுத முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்
அந்த வெற்றியை மீண்டும் நினைவுகூர்ந்த சகோதரர் விஜய்க்கு எனது வாழ்த்துகள். தமிழ் மக்கள் விஜய் மீது வைத்துள்ள நம்பிக்கையை அவரது அரசியல் வாழ்க்கை நிறைவேற்றும் ” என்று நம்பிக்கை தெரிவித்தார். மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்ற பாஜக மற்றும் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளுக்கும் பாலகிருஷ்ணா வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தலைமையில் மட்டுமே ஒரு புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
