தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மலையாளத் திரைப்படம் மூலம் நடிப்புத் துறையில் அறிமுகமான நயன்தாரா, ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். ரஜினிகாந்துடன் ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக ‘அண்ணாத்த’ படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார்.
தற்போது ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் ‘தர்மன்’ படத்தில் நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளதாகச் செய்திகள் பரவி வருகின்றன. ஏற்கனவே சிம்ரன், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்ட நிலையில், நயன்தாராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் நகைச்சுவைக்கும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், நயன்தாரா இப்படத்தில் நடிப்பது குறித்து படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
