Saturday, December 6, 2025

தமிழகத்தில் நாளை முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பணிகளை நாளைமுதல் புறக்கணிக்கவுள்ளதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உரிய திட்டமிடல், முறையான பயிற்சி, நிதி ஒதுக்கீடு செய்யாமல் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை நிர்பந்திப்பதால் பணிச் சுமை ஏற்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூடுதல் பணிகளை கருத்தில் கொண்டு ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் எஸ்ஐஆர் பணிகளை புறக்கணிக்கப் போவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News