அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் என்ற பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் அதனை உறுதி படுத்தும் விதமாக அதிமுக, பாஜக தலைவர்களும் பேசி வருகின்றனர். மார்ச் 25ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிலிருந்து அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக செய்திகள் வலம் வரத் தொடங்கியுள்ளன.
இந்த சூழலில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ளார். அங்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். இது எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபகாலமாக அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் அவர் திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளது அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.