Tuesday, December 16, 2025

சீமானின் அடுத்த மாநாடு … எப்போ, எங்கே தெரியுமா?

நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் ‘கடலம்மா மாநாடு’ நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் வரும் 21-ந்தேதி மாலை 4 மணியளவில், ‘கடலம்மா மாநாடு’ நடத்தப்படும். ஆதி நீயே! ஆழித்தாயே! என்ற முழக்கத்தை முன் வைத்து ‘கடலம்மா மாநாடு’ நடத்தப்படும். இந்த மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Related News

Latest News