Thursday, March 20, 2025

காவல் துறையின் சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம் : சீமான் பேட்டி

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : காவல் துறையின் சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம். அதற்காக கைது செய்வீர்களா? ஒசூர் வந்து என்னிடம் போலீசார் சம்மன் வழங்க மாட்டார்களா?

விசாரணைக்கு வரமாட்டேன் என்று நான் சொல்ல்வே இல்லை. ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி உள்ளதால் முடித்துவிட்டு மாலையில் விசாரணைக்கு ஆஜராவேன். அண்ணா பல்கலை.மாணவி வழக்கில் என்ன நடவடிக்கை காவல்துறை எடுத்துள்ளது? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை என்ன விசாரணை நடத்தி உள்ளது?

என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால், பாலியல் வழக்கை கையிலெடுக்கிறார்கள் என்னை சமாளிக்க முடியாமல் திமுக அரசு அந்த பெண்ணை அழைத்து வருகிறது. நடிகையை அச்சுறுத்தி நான் 7 முறை கருக்கலைப்பு செய்தேனா? அது உண்மையென்றால் அதுவும் ஒரு சாதனையே.

2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க.வால் தனித்து போட்டியிட முடியுமா? என்னைப்போன்று தனித்து நின்று என்னை எதிர்க்க ஸ்டாலின் தயாரா?

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Latest news