தமிழ் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த இயக்குநர், நடிகர், திரைக்கதையாசிரியர் கே. பாக்யராஜ், தனது இயல்பான கதை சொல்லும் பாணியால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் பணியாற்றிய அவர், பின்னர் அவராலேயே நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து வெற்றிகரமான இயக்குநராக உயர்ந்தார்.
சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, எளிமையான கதைகளில் சுவாரஸ்யமான திருப்பங்களையும் நகைச்சுவையையும் இணைக்கும் அவரது திறமையால், “திரைக்கதை மன்னன்” என்ற பெருமையைப் பெற்றார். இன்றும் பல இளம் இயக்குநர்கள் அவரது திரைப்படங்களை திரைக்கதை எழுதுவதற்கான பாடமாகக் கருதுகின்றனர்.
சினிமாவில் இயக்கம், நடிப்பு, எழுத்து என பல துறைகளில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பங்களித்த பாக்யராஜின் சாதனைகள் சமீபத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. இதனால் ரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர், புதிய தலைமுறையினருடனும் இணைந்து தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில், கே. பாக்யராஜின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
மேலும், அவர் சுயநினைவை இழந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
