சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு

49

ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டம் சடியா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 8 பேர் பார்மீர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றனர்.

அப்போது அதிவேகமாக வந்த லாரி கார் மீது மோது பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 8 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்து வருத்தமளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இந்த துக்க நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கடவுள் வலிமை தர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.