பாஜகவின் தமிழ்நாடு மாநில செயலாளரும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார், பாஜகவில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். மேலும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் இன்று த.வெ.க.வில் இணைய விழா நடைபெறும் அரங்கத்திற்கு வந்திருந்தார். இனி தமிழக வெற்றிக்கழகம்தான் தமிழகத்தின் வெற்றிக்களமாகப் போகிறது. அதனை தமிழகம், தமிழ்நாட்டு மக்கள் பொறுத்திருந்து பார்ப்பார்கள் என அவர் தெரிவித்தார்.