பூசணி விதைகள் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் K, வைட்டமின் E மற்றும் மினரல்கள் மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன.
பூசணி விதைகளில் உள்ள மக்னீசியம் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் இது நல்ல கொழுப்புகளைக் கொண்டுள்ளன. பூசணி விதைகளில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.
Also Read : வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா? ஆனா இந்த பிரச்சனை உள்ளவங்களுக்கு ஆபத்து..!
பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவற்றில் உள்ள துத்தநாகம் மற்றும் வைட்டமின் E தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
அதிக அளவில் பூசணி விதைகளை உட்கொண்டால், வயிற்றுப்போக்கு, வாயு அல்லது வயிற்று அசௌகரியம் போன்ற செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.