குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பால் குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது . பாலில் புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
பால் குடித்தால் பலவீனமான எலும்புகள் பலனடையும், தசைகளும் வலுவடையும். இதனால் உடலும் மனமும் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கும். மேலும் பாலில் இருக்கும் வைட்டமின் டி மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை ஆகும். இதனால்தான் பலர் காலை மட்டுமின்றி, இரவு தூங்கும் முன்னும் ஒரு கிளாஸ் பால் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
யாரெல்லாம் வெறும் வயிற்றில் பால் குடிக்க கூடாது?
ஆயுர்வேதத்தின் படி, காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பது அது நன்மைக்கு பதிலாக, தீங்கு தான் விளைவிக்கும். அதாவது பாலில் இருக்கும் சர்க்கரை உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க செய்யும்.
சிலருக்கு பால் சம்பந்தப்பட்ட பொருட்களால் ஒவ்வாமை ஏற்படும். இவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பால் குடித்தால் வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம், வாயு தொல்லை போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
Also Read : இந்த உண்மை தெரிந்தால் இனி பிரெஞ்சு ப்ரைஸ் சாப்பிடமாட்டிங்க
சிலருக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அவர்கள் வெறும் வயிற்றில் பால் குடித்தால் சருமத்தில் அரிப்பு, வயிற்றுப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
நீங்கள் ஏதேனும் நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொண்டால் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிக்க வேண்டாம். ஏனெனில் பாலில் கால்சியம் இருப்பதால் அது நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை செயல்படுத்தாது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.