சமையல் செய்வதால் மனதுக்கு கிடைக்கும் 4 சூப்பரான பயன்கள்!

189
Advertisement

வீட்டில் சமையல் செய்து சாப்பிடுவதால் பல நோய்களை தவிர்க்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், சமைப்பதால் மன ஆரோக்கியம் மேம்பட்டு மூளை சிறப்பாக செயல்படும் என மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

என்ன சமைப்பது என திட்டமிடுவது, அதற்கு தேவையான பொருட்களை தயார் செய்வது ஆகிய பணிகள் மூளையின் பல பாகங்களை இயங்க வைப்பதால் ஞாபகத் திறன் மற்றும் பொறுமை அதிகரிக்கும்.

கத்தியை வைத்து காய்கறி நறுக்கும் போது கவனிக்கும் திறன் அதிகமாகும். உணவு சமைக்கும் போது வரும் நறுமணம், மனதை அமைதிப்படுத்தும் அதே நேரத்தில் குறிப்பிட்ட கால அளவிற்கு மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் செயல்பாடாக அமைவதால் மன நல ஆரோக்கியத்துக்கு சமையல் பெரிதும் உதவுகிறது.

சமையல் செய்வது நாம் நினைப்பதை விட அதிகமான நரம்புகளை செயல்பட வைக்கிறது. இந்த நடவடிக்கைகளால் மூளைக்கு கிடைக்கும் நேர்மறையான தாக்கம், சிறப்பான மன ஆரோக்கியத்துக்கு பங்களிப்பதாக உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.