உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் சென்று சேர்க்கும் வகையில் உத்தர பிரதேசத்தில் பிரதிக்யா யாத்திரையை பிரியங்கா காந்தி நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
20 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கான மின்சார கட்டணம் ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கினார்.
கொரோனாவால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் பெண்களுக்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.