உத்தரபிரதேசத்தில் மின்துறை அமைச்சரின் நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தின் மவ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்துறை அமைச்சர் அரவிந்த்குமார் கலந்துகொண்டார். அப்போது அவர் பேச தொடங்கிய போது, மின்வெட்டு ஏற்பட்டதால், அந்த இடமே இருளில் மூழ்கியது.
இதனையடுத்து எந்தவிதமான வெளிச்சமும் இல்லாத அந்த இடத்தில் பேசிவிட்டு, மின்துறை அமைச்சர் அங்கிருந்து கிளம்பி சென்றார். அப்போது அவரது செருப்பை செல்போன் வெளிச்சத்தில் தேடிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.