Tuesday, June 17, 2025

வெறிச்சோடிய தைலாபுரம் – அன்புமணியை நோக்கி படையெடுத்த நிர்வாகிகள்

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அன்புமணி ராமதாஸ் இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பா.ம.க. நிர்வாகிகள் தனியார் மண்டபத்தை நோக்கி படையெடுத்து வரத் தொடங்கி உள்ளனர். இதனால் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டம் வெறிச்சோடி காணப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news