“பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் “

178
Advertisement

பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.


பிரதமர் மோடியின் 71வது பிறந்ததினத்தையொட்டி சிறப்பு ஏற்பாடாக அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் அதற்கான ஏற்பாடுகளை கடந்த சில நாட்களாக மத்திய அரசு செய்துவந்தது.

அதன்படி, இந்தியா முழுவதும் பல்வேறு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று இரவு எட்டு மணிவரை நீடிக்கப்பட்ட தடுப்பூசி முகாமில் 2. 5 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Advertisement

இதற்கு முன் ஒரு கோடி தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தாலும் 2.50 கோடி என்ற எண்ணிக்கையை இந்தியா எட்டியதில்லை. எனவே மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து கொரோனா தடுப்பூசி செலுத்தியது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.