Monday, April 28, 2025

ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

ஒடிசா மாநிலத்தில் சட்டசபை இன்று கூடியதும் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கடந்த 9 மாதத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பியும், பிஜேடி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

Latest news