யாரும் ஓட்டு போட வரல! அந்த கிராமத்தில் நடந்தது என்ன? குலைநடுங்கும் திகில் பின்னணி?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரும்பத்து கிராமத்தில், பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதனால் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து 5 மணி நேரம் கடந்தபோதும், யாரும் வாக்களிக்க வராத அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சீலா என்ற பெண் மட்டும் காவல்துறை பாதுகாப்புடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு பல இடங்களில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. எனினும், சில பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டன. பெரும்பத்து கிராமத்தில் மொத்தம் 969 வாக்காளர்கள் இருந்தும், பெரும்பான்மையினர் வாக்களிக்க முன்வரவில்லை.

கடந்த மார்ச் 2ம் தேதி அங்கு நடந்த கொடூர தாக்குதலில் மாற்றுத்திறனாளி ஜான் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளி திரிநாத் கட்டா உயிரிழந்தனர்; மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதி மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதி வெறிச்சோடிய சூழல் காணப்படுகிறது.

நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தற்போதைய எம்எல்ஏ ரூபி மனோகரன் மீண்டும் களத்தில் உள்ளார். இதற்கிடையில், மாநிலம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.576 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2021 தேர்தலை விட சுமார் 11 சதவீதம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News