“பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும்”

258
supriya-sule
Advertisement

பெண்கள் மீது தாக்குதல் நடத்த கை ஓங்கும் ஆணின் கைகள் உடைக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின மகளும், எம்.பியுமான  சுப்ரியா சுலே ஆவேசமாக பேசி உள்ளார்.

அண்மையில் மத்திய அமைச்சர்  ஸ்மிருதி இரானியின் புனே பயணத்தின் போது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது  தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர் மீது பாஜகவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின மகளும், எம்.பியுமான  சுப்ரியா சுலே, ஜல்கான் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

அப்போது, மகாராஷ்டிராவில்  பெண் மீது தாக்குதல் நடத்த எந்த ஆணாவது தன் கைகளை ஓங்கினால் தானே அங்கு சென்று அந்த ஆண் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என கூறினார். 

மேலும், தாக்குதல் நடத்த ஓங்கிய அந்த ஆணின் கைகளை உடைத்து அந்த ஆணிடமே கொடுத்துவிடுவேன்  என்றும் ஆவேசமாக பேசினார்.