மன அழுத்தம் முதல் ரத்தம் அழுத்தம் வரை.., அனைத்தையும் சரி செய்யும் புதினா

புதினா இலைகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் ஒரு இயற்கை மூலிகை ஆகும். இந்த பதிவில் புதினா இலைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன எனபதை பார்ப்போம்.

மன அழுத்தம்

புதினா இலைகளின் வாசனை, மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தம் மற்றும் கவலைகளை குறைக்க உதவுகிறது. அயுர்வேதத்தில், புதினா இலைகள் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு மூலிகையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சரும ஆரோக்கியம்

புதினா இலைகளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-இன்ஃபிளாமேட்டரி குணங்கள், சருமத்தில் உள்ள பிம்பிள்கள் மற்றும் புண்களை குணப்படுத்த உதவுகின்றன.

இரத்த அழுத்தம்

புதினாவில் உள்ள மருத்துவகுணங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

முடி ஆரோக்கியம்

புதினா இலைகளில் உள்ள கரோட்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த ஆதாரமாக உள்ளது. இவை முடி வளர்ச்சியை ஊக்குவித்து முடி உதிர்வதை தடுக்கின்றன.

உடல் எடை குறைப்பு

புதினா இலைகள் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. புதினா தேநீர் அல்லது புதினா நீர் போன்றவற்றை தினசரி உணவில் சேர்ப்பது, உடல் எடை குறைப்பில் உதவியாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News