தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மகளிர் தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் “நாம் எல்லோரும் சேர்ந்துதான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றுவார்கள் என்பது போதுதானே தெரிகிறது. மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இந்த அரசை மாற்றுவோம்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் : “த.வெ.க.-வை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை. நீங்கள் தான் அதை ஒரு பொருட்டாக பேசிக்கொண்டு உள்ளீர்கள். நாங்கள் அரசியல் கட்சிகளைப் பற்றி தான் பேச விரும்புகிறோம். திமுக வை தவிர வேறு எந்த கட்சியையும் சிறுபான்மையினர் நம்ப தயாராக இல்லை” என்று கூறினார்.