நடிகர் சைஃப் அலிகான் உண்மையிலேயே கத்தியால் குத்தப்பட்டாரா என்பதில் சந்தேகமாக இருப்பதாக கூறி மகாராஷ்டிரா அமைச்சர் நிதீஷ் ராணே சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
நடிகர் சைஃப் அலிகானின் கத்தி குத்து சம்பவத்தின் தாக்கம் இன்னும் மும்பையில் தணியாத சூழலில், அம்மாநில அமைச்சர் நிதீஷ் ராணேவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆறு இடங்களில் கத்தி குத்து வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலிகான், இரு நாள்களுக்கு முன்புதான் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
சைஃப் அலிகானின் முதுகு தண்டு வடத்தில் இறங்கிய கத்தி மேலும் ஒரு அடி ஆழம் இறங்கியிருந்தால் உயிருக்கே ஆபத்தாக நேரிட்டிருக்கும் என மருத்துவர் தெரிவித்திருந்த நிலையில், சைஃப் அலிகான் உண்மையிலேயே கத்தியால் குத்தப்பட்டாரா என்பதில் சந்தேகமாக இருப்பதாக கூறி அமைச்சர் நிதீஷ் ராணே சர்ச்சையை கிளப்பியுள்ளார்.