டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் 76 ஆயிரத்து 390 கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது நாட்டின் பாதுகாப்பு தளவாட தயாரிப்பு தொழிலுக்கு ஊக்கமளிப்பதுடன், வெளிநாட்டு செலவுகளை கணிசமாக குறைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படைக்கு, அடுத்த தலைமுறைக்கான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கும் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.