maharashtra-petrol-price
Advertisement

மகாராஷ்டிர மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.

கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி மகாராஷ்டிராவில் பெட்ரோல் மீதான வாட் வரி 2 ரூபாய் 8 காசுகளும், டீசல் மீதான வரி 1 ரூபாய் 44 காசுகளும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிராவை தொடர்ந்து பிற மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.