கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை மத்திய தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட எம்.எல்.ரவி என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் வழக்கு தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என்றும் அதிரடியாக அறிவித்தது.