“திட்டமிடப்பட்ட தாக்குதல்” – ராகுல் காந்தி

263
rahul gandhi
Advertisement

விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. நியாயம்தான் கேட்கிறோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில், உ.பி. அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில்,செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராகுல் காந்தி:

ஜீப்பால் மோதி விவசாயிகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. லக்னோ சென்ற மோடி லகிம்பூர் செல்லாதது ஏன்? என்னையும் என் குடும்பத்தினரையும் துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம். இந்த விவகாரத்தை எழுப்புவது ஊடகங்கள் பொறுப்பு. விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. நியாயம் கேட்கிறோம் என்றார்.