Thursday, April 24, 2025

பிரியங்கா காந்தி வாகனத்தை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட யுடியூபர்

வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா தனது தொகுதி மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் அங்கிருந்து கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பிரியங்கா சென்ற காரை வழிமறித்து வாலிபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் ஏலநாடு பகுதியை சேர்ந்த யுடியூபர் அனீஷ் ஆபிரகாம் என்பது தெரியவந்தது.

காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா சென்ற காரை திடீரென வழிமறித்த காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news