Wednesday, March 26, 2025

வீட்டிலிருந்து கட்சி நடத்தும் தவெக தலைவர் விஜய் : கி.வீரமணி விமர்சனம்

வீட்டிலிருந்து கட்சி நடத்தும் தவெக தலைவர் விஜய், கடைசி வரை வீட்டிலேயேதான் இருப்பார் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, பாசிசத்திற்கும் பாயாசத்திற்கு வித்தியாசம் தெரியாமல், யாரோ எழுதி கொடுப்பதை பேசும் விஜய், எத்தனை முறை களத்தில் வந்து மக்களை சந்தித்துள்ளார் என கேள்வி எழுப்பினார். வீட்டிலிருந்து கட்சி நடத்துவதால், கடைசி வரை விஜய் வீட்டிலேயேதான் இருப்பார் எனவும் விமர்சித்தார். பின்னர், பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலளித்த கி.வீரமணி, அண்ணாமலையில் நாக்கில் புண் உள்ளதாகவும், அதனால் அவர் புண் நாக்குடன் பேசுவதாகவும் சாடி இருக்கிறார்.

Latest news