ஒரே ஒரு காரின்மீது மட்டுமே பெய்த மழை

317
Advertisement

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதிலிருந்து பலரும் பலவிதமான அனுபவங்களை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில், ஒரேயொரு காரின்மீது மட்டுமே மழைபெய்த விநோத நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் 2022 ஆம் ஆண்டு, நவம்பர் 1 ஆம் தேதி மதியம் திடீரென்று மழைபெய்யத் தொடங்கியது. என்றாலும், விநோதமாக எல்லா இடங்களிலும் மழைபெய்யாமல், அங்குள்ள ஒரு ஹோட்டல் கார் பார்க்கிங்கில் பல கார்களுக்கு நடுவே நிறுத்தப்பட்டிருந்த ஒரேயொரு காரின்மீது மட்டுமே பெய்யத் தொடங்கியது.

அதனைக்கண்ட ஒரு நபர், யாரோ ஹோட்டலின் மேலிருந்துதான் தண்ணீரை ஊற்றுகின்றனர் என்று நினைத்துள்ளார். ஆனால், கார் நிறுத்தும் இடத்துக்கு அருகிலோ மேலேயோ அப்படிச் செய்வதற்கான ஏற்பாடு எதுவும் இல்லையென்பதைத் தெரிந்துகொண்டபிறகு, அந்த மழையை வீடியோ எடுக்கத் தொடங்கினார்.

உடனே, அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதைத் தொடர்ந்து ஒரேயொரு காரின்மீது மட்டுமே பெய்த மழையின் வீடியோ வைரலாகத் தொடங்கியது.

இதற்குமுன் 2017 ஆம் ஆண்டிலும் இதேபோன்று விநோதமாக தெற்கு ஜகார்த்தா பகுதியில் ஒரேயொரு வீட்டில் மட்டும் மழைபெய்துள்ளது.

அதற்குமுன் இத்தாலி நாட்டின் பலேர்மோ பகுதியிலுள்ள ஒரு சாலையின் ஒரு பகுதியில் மட்டுமே மழைபெய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

தற்போது ஒரேயொரு காரின்மீது மட்டுமே பெய்த மழை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.