Tuesday, July 15, 2025

ஈரான் கொடுத்த பதிலடி : இஸ்ரேல் அறிவியல் ஆராய்ச்சி மையம் கடும் சேதம்

​​ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள நிலையில், இஸ்ரேலின் ரெஹோவொட்டில் உள்ள வெய்ஸ்மென் உயிர் அறிவியல் மற்றும் இயற்பியலுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தை ஈரானிய ஏவுகணைகள் கடுமையாக தாக்கியது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் ஆராய்ச்சி மையத்தில் உள்ள பல ஆய்வகங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த நிறுவனத்தில் அறிவியல் பணிகளை மீண்டும் கட்டியெழுப்பவும், மீண்டும் இயல்பான பாதையில் கொண்டு வரவும் பல ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.

இஸ்ரேல் சில நாட்களுக்கு முன்பு ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அந்நாட்டின் அணு விஞ்ஞானிகள், உயர் தளபதிகளை கொன்றனர். இப்போது அதே பாணியில் ஈரானும், இஸ்ரேல் விஞ்ஞானிகளை குறிவைத்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news