அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதும், நோட்டாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் ஆட்சியை பாஜக தக்கவைத்துள்ளது. அதேசமயம், பஞ்சாபில் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
இந்தத் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாமல், நோட்டாவுக்கு வாக்களித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 5 மாநிலங்களிலும் நோட்டாவுக்கு 7 லட்சத்து 99 ஆயிரத்து 302 பேர் வாக்களித்துள்ளனர்.
செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் 6ல் ஒரு பங்குக்குக் குறைவாகப் பெறும் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழப்பார்கள்.
அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 97 சதவிகித காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர். 72 சதவிகித பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.