இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி தவிர, வெளிநாடுகளில் இருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தால், வெளிநாட்டு இறக்குமதி குறைந்துள்ளதாக, மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் 24.8 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2020-21 ஆம் நிதியாண்டில் 21.5 கோடி டன் நிலக்கரி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது.
மேலும் 2021-22 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 20.9 கோடி டன்னாக குறைந்துள்ளது.