ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் – மத்திய அரசு விளக்கம்

235
Advertisement

ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு 120 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ், மத்திய அரசு 120 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்குகிறது. இந்த ஊக்கத் தொகை பெறும் 23 பயனாளிகளின் தற்காலிக பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தில் பயன் பெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ட்ரோன் உற்பத்தியாளர்களின் ஆண்டு விற்பனை வருவாய் 2 கோடியாகவும், ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் ஆண்டு விற்பனை வருவாய் 50 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அல்லாத ட்ரோன் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு விற்பனை வருவாய் 4 கோடியாகவும், ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு விற்பனை வருவாய் ஒரு கோடியாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.