திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியின் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் விஜயகுமார். இவர் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்த்துக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டார்.
இந்த நிகழ்வு அதிமுக உட்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுகவின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதால்,விஜயகுமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.
இது குறித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ விஜயகுமார் விளக்கமளித்துள்ளார். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் வற்புறுத்தி கேட்டதாலயே கையெழுத்திட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தன் தரப்பு விளக்கத்தை அளிப்பேன் எனவும் அவர் கூறியிருக்கிறார்.