Thursday, March 20, 2025

நான் அதிமுகவை பற்றி பேசவே இல்லை – கோவையில் அண்ணாமலை பேட்டி

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோற்றோம் என்றார்கள். இன்று பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம் என அவர் பேசினார். கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை என அதிமுக தரப்பில் இருந்து பதில் வந்தது.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நேற்று நான் பாஜகவை பற்றிதான் பேசினேன். அதிமுகவை பற்றி எங்கையாவது குறிப்பிட்டேனா? கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி அண்ணன் தெளிவாக கூறிவிட்டதாக பேட்டி அளித்துள்ளார்.

Latest news