நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பிரபாகரனுடன் இருந்த புகைப்படத்தை எடிட் செய்தது நான்தான்” என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த புகைப்படம் எடிட் குறித்து சீமானிடம் இருந்து சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது : நான் பிரபாகரனின் ரத்த உறவு அல்ல, லட்சிய உறவு. அவரது லட்சியத்துக்காக நாங்கள் தான் நிற்கிறோம். பிரபாகரனின் அண்ணன் மகனுக்கு உலகம் முழுவதும் உள்ள சொந்தங்கள் பதில் சொல்வார்கள். ஒருவர் நான் பிரபாகரனை சந்திக்கவில்லை என்கிறார். மற்றொருவர் 8 நிமிடம் தான் சந்தித்தேன் என்று கூறுகிறார்.
ஒருவர் போட்டோ எடிட் செய்ததாக கூறுகிறார். நானே சொல்கிறேன் பிரபாகரனை சந்திக்கவே இல்லை. இப்போது எதை நம்புவீர்கள். பிரபாகரன் உடன் எடுத்த போட்டோ உண்மை என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் கூறியுள்ளார்.